அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் 'இருக்கு ஆனா இல்ல..'

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்.
அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் இருக்கு ஆனா இல்ல..
x
திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களின் கடைகோடி பகுதியில் உள்ள அய்யலூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது சுக்காவளி கிராமம்.

4 மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஆங்காங்கே வீடுகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த கிராமத்திற்கு முதன் முதலாக மின்சாரம் கொடுக்கப்பட்டது. ஆனாலும்  இன்றளவும் பல குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் சிம்னி விளக்கில் தான் தங்கள் வாழ்வை கழித்து வருகின்றன.

சுக்காவளி கிராமத்திற்கு ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளபோதிலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இல்லை. மாறாக  பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது, அதிலும் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிய படியே உள்ளது. தனிநபர் கழிப்பறை கேட்டு விண்ணப்பித்தும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தெரு விளக்கு 2 மட்டுமே அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த எவரும் அரசு பணியில் இல்லை, மாறாக கூலி வேலை செய்துதான் வாழ்ந்து வருகின்றனர்.

சுக்காவளி கடைசியில் உள்ள மலை பகுதி வரை தான் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் சாலை அமைக்காததால் மக்கள் தங்களின் தேவைகளுக்கு அய்யலூர் அல்லது வடமதுரைக்கு செல்ல, 9 கிலோமீட்டர் சுற்றி கீரனூர் பகுதிக்கு வந்து செல்லும் நிலையே உள்ளது.  மேலும் 9 கிராம மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கும் சாலை வசதி இல்லை. சுக்காவளி பகுதிக்கு எந்தவித பேருந்து வசதியும் இல்லை, அவசர தேவை என்றால் அவ்வழியே செல்லும் ஆட்டோ அல்லது இருசக்கர வாகனத்தை எதிர்நோக்கும் அவலமே மிஞ்சியுள்ளது.

இந்த கிராமத்தின் நிலையை அரசின் கவனத்திற்கு சென்று, தங்களுக்கான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்திட வேண்டும் என்பதே சுக்காவளி கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்