மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம் - தமிழகத்தில் 412 மையங்களில் பயிற்சிகள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன
மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம் - தமிழகத்தில் 412 மையங்களில் பயிற்சிகள்
x
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை  நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்விற்கு மாணவர்களை தகுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு  சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த ஆண்டு நடந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் 30 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இந் நிலையில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. 

இதற்காக தமிழகம் முழுவதும் 412 மையங்களில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 மையங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சென்னையில் அளிக்கப்படும் பயிற்சி செயற்கை கோள் மூலம் 412 மையங்களிலும் ஒளிபரப்பாகிறது. 

ஆசிரியர்கள் வேகமாக பாடத்தை நடத்துவதால் குறிப்பெடுக்க சிரமமாக இருப்பதாக மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது. 

பயிற்சியின் போது, மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள், உடன் இருந்து உதவுவதாக கூறுகிறார் முதுகலை விலங்கியல் ஆசிரியை அமலராணி.

இந்த ஆண்டு முன்கூட்டியே பயிற்சியை துவக்கியிருப்பது, ஆசிரியர்களின் கூடுதல் உழைப்பு ஆகியவை காரணமாக, இந்த கல்வியாண்டில் நடக்கும் நீட் தேர்வில், அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்