காற்றாலை மின்சாரம் குறைந்தது : மின்வெட்டால் மக்கள் அவதி

தேனி மாவட்டத்தில் பருவக்காற்று குறைந்ததை அடுத்து மின் உற்பத்தி சுமார் 10 மெகாவாட்டாக குறைந்துள்ளதால் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காற்றாலை மின்சாரம் குறைந்தது : மின்வெட்டால் மக்கள் அவதி
x
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கண்டமனூர், காமாட்சிபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு கடந்த நான்கு மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசியதால் நாள் ஒன்றுக்கு சுமார் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பருவக்காற்று குறைந்ததை அடுத்து,  மின் உற்பத்தி சுமார் 10 மெகாவாட்டாக குறைந்துள்ளது.  இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்