பழமையான கோவில் கலசம் கொள்ளை : சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 1500 ஆண்டுகள் பழமையான கோவில் கலசம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2ஆம் கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழமையான கோவில் கலசம் கொள்ளை : சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை
x
காங்கேயம் அடுத்துள்ள அரசம்பாளையத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பட்டாலிபால் வெண்ணீஸ்வரர் கோவில் உள்ளது.  இந்த சிறப்புமிக்க கோவில் கருவறையின் மேல் உள்ள கோபுரத்தில் இருந்த பழமையான கோபுரகலசம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருட்டு போனது. 

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது சிலை கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த திருட்டு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் 10 அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கட்டமாக ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மீண்டும் ஊழியர்களிடம் 2ஆம் கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்