விநாயகர் சிலைகள் கரைப்பு - பக்தர்கள் ஆரவாரம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் கரைப்பு - பக்தர்கள் ஆரவாரம்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. கீழநாஞ்சில்நாடு, சேந்தங்குடி, மல்லியம் உள்ளிட்ட பகுதிகளில் பரிமள விநாயகர், வெற்றி விநாயகர், அரசமரத்தடி விநாயகர் என பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், விநாயகர் சிலைகள் அனைத்தும், ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, காவிரி துலாக்கட்டம் பகுதியில் கரைக்கப்பட்டன. 

பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு



கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. விவேகானந்தர் பேரவை சார்பாக, பழத்தோட்டம், தியேட்டர் மேடு, நால்ரோடு, ரேயான் நகர், மீனம்பாளையம், பெரிய குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த 45 விநாயகர் சிலைகள், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. 

விநாயகர் சிலைகள், தாமிரபரணி ஆற்றில் கரைப்பு



கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு சிவசேனா சார்பில் வைக்கப்பட்ட 63 வினாயகர் சிலைகள், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது. திருவட்டார், மேல்புறம் மற்றும் குழித்துறை பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் அளப்பங்கோடு ஈஸ்வர கால பூதத்தான் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்