அக்டோபரில் துவங்கும் 2 ஆம் கல்வி பருவம் : 1 - 9 ஆம் வகுப்பினருக்கு 2.12 கோடி புத்தகங்கள் தயார்..

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் கல்வி பருவத்திற்காக 2 கோடியே 12 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன.
அக்டோபரில் துவங்கும் 2 ஆம் கல்வி பருவம் : 1 - 9 ஆம் வகுப்பினருக்கு 2.12 கோடி புத்தகங்கள் தயார்..
x
ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமலில் உள்ள நிலையில், வருகிற அக்டோபர் முதல் இரண்டாம் பருவம் துவங்குகிறது. 

இதையடுத்து, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, சுமார் ஒன்றரை கோடி இலவச பாட புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்காக 78 லட்சம் விற்பனை பிரதிகள், தயாராகி உள்ளன. 

இப்புத்தகங்கள் இம்மாத இறுதியில் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்றும், அக்டோபர் 3 ஆம் தேதிக்கு பிறகு, அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநுால் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதே போல், 11 ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இரண்டாம் தொகுதியாக, 75 லட்சத்து 30 ஆயிரம் பாட புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்காக 30 லட்சத்து 73 ஆயிரம் லட்சம் புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. 

இந்த புத்தகங்களும் விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்