அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு
x
அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் இயக்குனர் சுடலை கண்ணன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதன்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டில் 56 லட்சமாக குறைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், மேலும் குறைந்து 46 லட்சமாக உள்ளது.

21 ஆயிரத்து 378 பள்ளிகளில், வெறும் 15 முதல் 100 வரையிலான மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

6 ஆயிரத்து 167 பள்ளிகளில், 101 முதல் 250 வரையிலான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

714 அரசு பள்ளிகளில் மட்டுமே, 251 முதல் ஆயிரம் வரையிலான மாணவர்கள் படித்து வருவதும் தெரியவந்துள்ளது. 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள், வெறும் நான்கு மட்டுமே உள்ள நிலையில், 

900 பள்ளிகளில் பத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

அதே நேரத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 22 லட்சமாக இருந்த தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது, 52 லட்சமாக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்