கால் இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்கவில்லை - பஞ்சர் ஒட்டும் சுப்பிரமணி

கால் துண்டிக்கப்பட்ட போதிலும் கைவிடப்படாத நம்பிக்கையால் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்கிறார் சுப்பிரமணி
கால் இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்கவில்லை - பஞ்சர் ஒட்டும் சுப்பிரமணி
x
* திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி. 18 வருடங்களுக்கு முன் கருதடிக்கும் இயந்திரத்தின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கி இவரின் ஒரு கால் துண்டானது. 

* இதனால் மனமுடைந்து போன அவர் சில ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்துள்ளார். ஆனால் தன்னை நம்பி தன் குடும்பம் இருப்பதை உணர்ந்த சுப்ரமணி தன் குறைகளை களைந்து விட்டு புது மனிதராக வெளியே வந்தார். 

* இழந்த தன் காலுக்கு மாற்றாக செயற்கை காலை பொருத்திய அவர், வேலை தேடி அலைய ஆரம்பித்தார். ஆனால் அவரின் குறையை சுட்டிக் காட்டி பலரும் வேலை தர மறுத்தனர். 

* இந்த நிலையில் வங்கியில் கடன் வாங்க, இருசக்கர வாகனத்திற்கு பஞ்சர் ஒட்டும் கடை ஒன்றை தொடங்கினார், சுப்ரமணி.. தொடர்ந்து கார், கனரக வாகனம் என எதுவாக இருந்தாலும் அதை திறம்பட செய்து அசத்தி வருகிறார். இதன் மூலம் தனக்கு போதிய வருமானம் கிடைப்பதாகவும், தன் குடும்பத்தை மகிழ்ச்சியாக நடத்த முடிவதாகவும் கூறுகிறார். 

* ஒரு காலை இழந்த போதிலும் மற்றவர்களை போலவே இருசக்கர வாகனத்தையும் இயக்கும் திறன் படைத்தவராக உள்ளார். இரவு நேரங்களில் வாகனங்கள் பழுதானால் கூட இவரை அழைத்தால் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சரி செய்து கொடுக்கிறார். 

* தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்காக வாழ்க்கை சூழலை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றியிருக்கிறார் இந்த நம்பிக்கை மனிதர். 


Next Story

மேலும் செய்திகள்