8 வழி பசுமை சாலை 6 வழியாக மாற்றம்

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம், திடீரென 6 வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.
8 வழி பசுமை சாலை 6 வழியாக மாற்றம்
x
சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை தொடர்பான திருத்தப்பட்ட அறிக்கையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  சென்னை - சேலம் இடையே, முதற்கட்டமாக 6 வழி சாலை அமைக்கப்படும் என்றும்,  போக்குவரத்து அதிகரிக்கும் போது, அது 8 வழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்த 6 வழி சாலை திட்டத்தின் மதிப்பு, 7 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி, வனப்பகுதி வழியாக செல்லும் சாலையின் நீளம் 13 கிலோ மீட்டரில் இருந்து, 9 கிலோ மீட்டராக குறைக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

277.30 கிலோ மீட்டர் தூர சென்னை - சேலம் பசுமைவழிச்சாலையின் அகலம்,  வனம் அல்லாத பகுதியில் 70 மீட்டராகவும், வனப்பகுதியில் 50 மீட்டராகவும் குறைக்கப்படுள்ளது. 8 வழிசாலை திட்டம் அறிவிக்கப்பட்ட  போது அது 90 மீட்டராக இருந்தது  குறிப்பிடத்தக்கது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலையில் இருந்த செங்கல்பட்டு - காஞ்சிபுரம், செம்மம்பாடி - சேத்துப்பட்டு, போளூர் -திருவண்ணாமலை சாலைப்பணிகள், 6 வழிச்சாலை திட்டத்தில் கைவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்