கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக நிரம்பாத எடமச்சி ஏரி

செங்கல்பட்டை அடுத்த எடமச்சி பகுதியில் உள்ள ஏரி சரியாக தூர்வாரப்படாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக நிரம்பாத எடமச்சி ஏரி
x
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த எடமச்சி பகுதியில் உள்ள ஏரியின் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள 940 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி முழுமையாக நிரம்பும் போது மூன்று போகம் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஏரி முழுமையாக நிரம்பாததால் ஒரு போகத்தோடு விவசாயம் நின்றுவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

ஏரியை முறையாக தூர் வாராமல் இருப்பதால் தண்ணீர் முழுமையாக நிரம்புவதில் தடை இருப்பதாகவும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். எனவே பாசனக் கால்வாய், மதகுகள் உள்ளிட்டவற்றை சீர் செய்ய அரசு முன் வர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்