உயரம் குறைவான பெண்ணுக்கு ஆரோக்கிய குழந்தை : குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் எலும்பு வளர்ச்சி குறைபாடு உள்ள உயரம் குறைவான பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
உயரம் குறைவான பெண்ணுக்கு ஆரோக்கிய குழந்தை : குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்த மாவட்ட ஆட்சியர்
x
குப்பந்தாங்கல் என்ற கிராமத்தை சேர்ந்த 110 சென்டி மீட்டர் உயரம் கொண்ட உமா மகேஸ்வரி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அறுவை சிகிச்சை மூலமாக உமா மகேஸ்வரிக்கு 2 கிலோ 300 கிராம் எடையில் அழகிய ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை நேரில் பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒரு சவரன் தங்க சங்கிலி மற்றும் பசுமை வீடு ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்