கோவை குண்டு வெடிப்பு வழக்கு : 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரஷீத் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கு : 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
x
கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு, 19 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக, அல்உம்மா அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 168 பேரை சி.பி.சி.ஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், 2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டு153 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய நூகு என்ற மாங்காவு ரஷீத் என்பவர், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அவர் கத்தார் நாட்டில் இருந்த நிலையில், இன்று காலை கேரளாவுக்கு வருவதாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கேரளாவில் முகாமிட்ட சிபிசிஐடி போலீசார், அங்குள்ள பண்ணியங்காரா  கிராமத்தில் ரஷீத்தை கைது செய்தனர். கோவை குண்டு வெடிப்பில் திட்டம்போட்டு கொடுத்ததோடு, குண்டு வைத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ரஷீத் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்