தூத்துக்குடி சோபியாவின் டுவிட்டர் கணக்கு மாயமாகி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது

தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதான சோபியாவின் ட்விட்டர் கணக்கு திடீரென மாயமாகி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
தூத்துக்குடி சோபியாவின் டுவிட்டர் கணக்கு மாயமாகி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது
x
* சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த சோபியா, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து வந்தார். 

* மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, சமூக செயற்பாட்டாளர் வளர்மதி,  குறும்பட இயக்குநர் திவ்யபாரதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்தவர் சோபியா. 

* தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, விமானத்தில் இருக்கிறேன்.... பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கத்த வேண்டும் போல இருக்கிறது.. அவ்வாறு செய்தால் என்னை விமானத்தில் இருந்து வெளியே தூக்கி வீசி விடுவார்களோ? என ட்வீட் செய்திருந்தார். 

* ஆனால் சோபியா கைதான சில நிமிடங்களில் இந்த ட்வீட் மட்டும் நீக்கப்பட்டிருந்தது. பிறகு, ஜாமீனில் வெளியான சில நிமிடங்களில் சோபியாவின் ட்விட்டர் கணக்கு மாயமானது. 

* ஆனால் சில நிமிடங்களிலேயே ட்விட்டர் கணக்கு மீண்டும் வந்தது. ஏற்கனவே ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்த நிலையில் மீண்டு வந்த கணக்கில் ஃபாலோயர்கள் குறைவாகவே காட்டுகிறது. 

* சோபியாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா? அல்லது அவரே கணக்கை நீக்கினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்