விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க தமிழக அரசு திட்டம்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க தமிழக அரசு திட்டம்
x
தமிழகத்தில் விவசாயம், மீன் வளர்ப்பு, கறவை மாடு, ஆடு, கோழி, வாத்து, முயல், காடை, வான்கோழி, தேனீ வளர்ப்பு,  வீட்டுத் தோட்டம், பண்ணைக் குட்டைகள் அமைப்பு, சாண எரிவாயு, மண்புழு உரம் போன்ற பணிகளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நெல்லை, மதுரை, தஞ்சை, விழுப்புரம், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் முதல்கட்டமாக நடப்பாட்டில் அறிமுகமாகிறது. இந்த ஐந்து மாவட்டங்களில் 2,500 ஒருங்கிணைந்த விவசாய குழுக்கள் உருவாக்கப்பட்டு குழுவுக்கு இரண்டு விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். வேளாண் துறை, கால்நடை துறை, மீன்வள துறை ஆகியவை மூலம் நடப்பாண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்