தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயதுமூப்பின் காரணமாக  ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் நேற்று இரவு 9.15 மணிக்கு அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், இன்று காலை மருத்துவமனைக்கு சென்று, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். உரிய சிகிச்சைக்கு பிறகு தயாளு அம்மாள் இன்று மதியம் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 

Next Story

மேலும் செய்திகள்