உயிரிழந்ததாக கூறப்படும் மாணவன் அரை நிர்வாணமாக ஓடிய வீடியோவை வெளியிட்டது ரயில்வே போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மாணவன், அரை நிர்வாணமாக தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகளை ரயில்வே போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்ததாக கூறப்படும் மாணவன் அரை நிர்வாணமாக ஓடிய வீடியோவை வெளியிட்டது ரயில்வே போலீஸ்
x
பொன்னேரியை அடுத்த சின்ன காவனம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மெளலீஸ்வரன், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் தேதி தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற ரயில்வே போலீஸார், அடித்துக் கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கூறி, போராட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அங்கத் குமார், காவலர் வினைய் குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, மாணவன் மரணம் தொடர்பாக, பொன்னேரி குற்றவியல் நீதிபதி சதீஷ் குமார், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து மாணவன் மெளலீஸ்வரன் அரை நிர்வாணமாக தப்பியோடுவது போன்ற சிசிடிவி காட்சியை ரயில்வே போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதனால், இச்சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்