ரயில் கொள்ளை - துப்பு கொடுத்த நாசா

2016 ஆம் ஆண்டு, ரயிலில் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தமிழக காவல்துறைக்கு துப்புக் கொடுத்துள்ளது
ரயில் கொள்ளை - துப்பு கொடுத்த நாசா
x

சேலத்திலிருந்து சென்னை வந்தடைந்த விரைவு ரயிலில் கடந்த 2016ஆம் ஆண்டு வங்கி பணம் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் நடந்து சுமார் இரண்டு வருடம்  கடந்து விட்ட நிலையில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில், தமிழக சிபிசிஐடி உயர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ரயில் கொள்ளை குறித்து 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் உதவி கோரியது. இதனை தொடர்ந்து, ரயில் பயணித்த 350 கிலோ மீட்டர் தூரத்தில் எடுக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள் படங்களை நாசா அனுப்பியது. அந்த புகைப்படங்கள் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்த கட்டட தொழிலாளிகள் 11 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 
Next Story

மேலும் செய்திகள்