கேரளாவில் நடந்தது என்ன? - சீமான் விளக்கம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கேரளாவில் நடந்தது என்ன? - சீமான் விளக்கம்
x
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோட்டயம் முகாமுக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, போலீசார் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கேரளாவில்  நடந்தது என்ன என்பது குறித்து சீமான், சென்னையில் விளக்கம் அளித்தார்.ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கோட்டயம் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்தனர். தமிழர்களின் நிவாரணம் குறித்து அதிகாரிகள் பெருமிதம் அடைந்தனர். கட்சி கொடி, படத்தை பார்த்தே  போலீசார் சந்தேகம் அடைந்தனர் பின் முகவரி, செல்போன் எண் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்" என தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்