கழுத்து அறுத்து 200 அடி பள்ளத்தில் வீசப்பட்ட கார் ஓட்டுநர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கழுத்து அறுபட்டுக் கிடந்தார்.
கழுத்து அறுத்து 200 அடி பள்ளத்தில் வீசப்பட்ட கார் ஓட்டுநர்
x
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வாடகை கார் ஓட்டுநராக இருந்து வந்தார். நேற்றிரவு வீட்டிற்கு , நீண்டநேரமாகியும் வரவில்லை. இந்நிலையில்,  
உகார்த்தே நகர் பகுதியில் 200 அடி பள்ளத்தில் கார் ஒன்று ரத்தக் கறையுடன் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார், பள்ளத்தில் கிடந்த காரில் கழுத்து அறுபட்டுக் கிடந்த பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்