முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி: பொதுமக்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு தமிழகத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி:  பொதுமக்கள் அஞ்சலி
x
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அஸ்தி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 

மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் , வாஜ்பாயின் அஸ்தியை  விருதுநகர் கொண்டு  சென்றார் . அங்குள்ள  மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அஸ்திக்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்டத்திற்கு வாஜ்பாய் அஸ்தி கலசத்தை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கொண்டு சென்றார். 

அங்கு ஏராளமானோர் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். ஒசூருக்கு கொண்டுவரப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சூளகிரி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளிலும் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்