தகாத உறவில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவன்

கோவில்பட்டி அருகே தகாத உறவில் ஈடுபட்டிருந்த மனைவியையும், அவரது நண்பரையும் கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவன்
x
கோவில்பட்டி அருகே மும்மலைப்பட்டியை சேர்ந்த அரிகிருஷ்ணன், கேரள மாநிலத்தில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். மழை வெள்ள பாதிப்பை அடுத்து ஊர் திரும்பிய அரிகிருஷ்ணன் வீட்டில் மனைவி தங்கமாரியம்மாள் இல்லாததால் அவரை தேடியுள்ளார். 

அப்போது ஊருக்கு வெளியே தங்க மாரியம்மாள், அவருடன் வேலை செய்யும் பெருமாள் என்பவருடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன் 2 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கடம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

இதனையடுத்து 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த  போலீசார், இரட்டை கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்