ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதை பொருள் வரவழைப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதைப் பொருளை வரவழைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதை பொருள் வரவழைப்பு
x
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் மாத்திரை மற்றும் பவுடர் வடிவிலான போதை பொருட்கள் விற்பனையாவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. 

இதையடுத்து, அடையாறு காவல் துணை ஆணையர் ஷசாங் சாய் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், திருவான்மியூரில் சுற்றித் திரிந்த நிகில் திவாரி என்பவரை கைது செய்தனர். 

அவரிடம் இருந்து மெத்தாம்பிட்டமைன் உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், இணையதளம் மூலம் ஆர்டர் செய்து, 

ஆப்கானிஸ்தானில் இருந்து தபால் வழியாக போதை பொருளை நிகில் திவாரி வரவழைத்தது தெரிய வந்தது. வட மாநிலத்தை சேர்ந்த நிகில், எம்.எஸ்.சி பட்டதாரி ஆவார். 

போதை பொருளுக்கு பிட்காயின் மூலம் பணத்தை செலுத்தி இருக்கிறார். கல்லூரி மாணவர்களுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று போதை பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்