மணல் கடத்தல் : தடுக்க முயன்ற அதிகாரியை தள்ளி விட்டு ஓடிய லாரி ஓட்டுனர்

மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை கீழே தள்ளி விட்டு லாரி ஓட்டுநர் தப்பிச் சென்ற சம்பவம் ஆம்பூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணல் கடத்தல் : தடுக்க முயன்ற அதிகாரியை தள்ளி விட்டு ஓடிய லாரி ஓட்டுனர்
x
வேலூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள பாலாற்றில் இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற டிப்பர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் வருவாய்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய வருவாய்த்துறை அதிகாரி வெங்கடேசனை டிப்பர் லாரி ஓட்டுனர் திடீரென கீழே பிடித்து தள்ளி விட்டார். 
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளார்.  அவர் ஓட்டிச் சென்ற  டிப்பர் லாரி மோதியதில் இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பிய ஓடிய மணல் லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வெள்ளநீர் குறைந்ததும் தொடங்கியது மணல் திருட்டு

பவானி ஆற்றில் வெள்ளநீர் குறைந்ததும் மணல் திருட்டு மீண்டும் தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆற்றில் மணல் அள்ளப்படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக மணல் திருட்டு குறைந்திருந்தது. இந்நிலையில்,கடந்த வாரம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு தற்போது குறைந்ததுள்ளதை தொடர்ந்து, பல பகுதிகள் மணல் மேடுகளாக மாறியுள்ளன. இதை தொடர்ந்து, மீண்டும் மணல் திருட்டு நடைபெற தொடங்கியுள்ளது.மணல் திருட்டில் ஈடுபடும் கும்பல் மீது வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்