நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
x
* டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. திரளானோர் இதில் கலந்து கொண்டனர். வேறொரு இடத்தில் நடந்த சிறப்பு தொழுகையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார்.

* ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று உலக அமைதி வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்தனர். 

* மும்பை மாஹிம் பகுதியில் பக்ரீத் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழுகைக்கு பிறகு ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது. 

* உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் முபாரக் கான் சஹீத் பகுதியில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இதில் பங்கேற்றனர்.


 தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.

* நாகை மாவட்டம் நாகூரில் பொது இடத்தில் பக்ரீத் சிறப்புதொழுகை நடந்தது. தொழுகை முடிந்த பிறகு, ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். 

* மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.  

* புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி வாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள், கேரள மக்களுக்குகாக நிதி திரட்டியதோடு, நிவாரணப் பொருட்களையும் சேகரித்தனர். 

* புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டையில் நடந்த பக்ரீத் தொழுகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்