சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி

சைக்கிள் வாங்க சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவின் துயரை கண்டு நிவாரண தொகையாக அனுப்பி வைத்த மாணவி அனுப்பிரியாவின் உன்னத உள்ளத்தை விரிவாக பார்க்கலாம்...
சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி
x
மழை வெள்ளத்தால் மிகப் பெரிய இயற்கை பேரழிவை சந்தித்துள்ள கேரளா, அதிலிருந்து மீண்டு வர பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வருகின்றனர்.

கேரள மக்கள் படும் துயரத்தை தொலைக்காட்சியில் பார்த்த விழுப்புரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்த பணம் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. 

விழுப்புரம் கே.கே.சாலை சிவராம் லே & அவுட்டை சேர்ந்த சிவசண்முகநாதன் மற்றும் லலிதா தம்பியதியினரின் மகள் அனுப்பிரியா, தனது உண்டியல் பணத்தை நிவாரணமாக வழங்குமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

அனுப்பிரியா தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக ஆசை ஆசையாய்  எல்.கே.ஜி முதல் 4 ஆண்டுகளாக 5 உண்டியல்களில் பணத்தை சேமித்து வந்தார். சைக்கிள் வாங்க 4 உண்டியலை நிரப்பி ஐந்தாவது உண்டியலில் பணத்தை சேமித்து வந்து கொண்டிருந்த அனுப்பிரியாவின் மனதை கேரள வெள்ள பாதிப்பை மாற்றியுள்ளது. 

கேரள மழை வெள்ளத்தால் தன்னை போன்ற சிறுவர், சிறுமியர்களின் அழுகுரல் கேட்ட சிறுமி அணுப்பிரியா, தனக்கு சைக்கிள் வேண்டாம், தனது சேமிப்பு பணத்தை கேரளாவுக்கு கொடுத்துவிடலாம் என பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். 

இதன்படி, சிறுமி சேமித்து வைத்திருந்த 8 ஆயிரத்து 246 ரூபாயை வரைவோலை எடுத்து கேரளாவிற்கு தபால் மூலம் அனுப்ப உள்ளனர், அனுப்பிரியாவின் பெற்றோர்.

சிறு வயதிலேயே  மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சிறுமி அனுப்பிரியாவின் உன்னத செயலை அறிந்த ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம், சிறுமிக்கு ஆண்டுதோறும் பிறந்த நாளின்போது ஒரு புதிய சைக்கிள் வழங்க உள்ளதாக அறிவித்தது.

நேற்று மாலை சிறுமி அனுப்பிரியாவின் குடும்பத்தினரை அழைத்த, ஹீரோ நிறுவனத்தின் தென்னிந்திய பொது மேலாளர், 5 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை பரிசாக வழங்கினார்.

தங்கள் மகளின் நற்செயலுக்கு இவ்வளவு பாராட்டுகள் குவியும் என்று தாங்கள் நினைக்கவில்லை என மனம் நெகிழ்கின்றனர் அனுப்பிரியாவின் பெற்றோர்.


எந்திரமயமாக இயங்கும் எந்த உலகில் அண்டை வீட்டாரை பற்றியே கவலைப்படாத மனிதர்களும் இருக்கிறார்கள். பிறர் நலனை கருத்தில் கொண்டு உதவும் மனப்பான்மையை குழந்தை பருவத்திலேயே சொல்லி தருவது வருங்கால உலகிற்கு நல்லது. அதற்கு உதாரணமாக திகழும் சிறுமி அனுப்பிரியாவையும், அவரின் பெற்றோரையும் பாராட்டலாம்...



Next Story

மேலும் செய்திகள்