"மேற்கு பகுதிகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்; கிழக்கு பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வறட்சி"- நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கு பகுதிகளான குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேற்கு பகுதிகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்; கிழக்கு பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வறட்சி- நாமக்கல்
x
நாமக்கல் மாவட்டத்தில் மேற்கு பகுதிகளான குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் கிழக்கு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் கடலை பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உடனடியாக தமிழக அரசு கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

காவிரியால் பலனில்லை - விவசாயிகள் வேதனை
    அரியலூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் காவிரி நீரால் தங்களுக்கு எந்த பயனுமில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருச்சி முக்கொம்பு மற்றும் கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி தண்ணீர் வங்க கடலில் கலக்கிறது. 

இவ்வாறு வீணாகும் தண்ணீரை சேமிக்கும் விதமாக திருமழபாடி, ஆங்கரை உள்ளிட்ட 7 இடங்களில் தடுப்பணைகள் மற்றும் கால்வாய்கள் கட்டி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விளை நிலங்களின் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்