வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள கந்தன்பட்டறை, பழனிபுரம், சீனிவாசபுரம் என பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்
x
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள கந்தன்பட்டறை, பழனிபுரம், சீனிவாசபுரம் என பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 650க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திருமண மண்டபங்கள், பள்ளிகன் என 8 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒரிச்சேரி என்ற பகுதியில் சாலைகளிலும் நீர் சூழ்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

பாலம் மற்றும் தார்ச்சாலையை மூழ்கடித்த வெள்ள நீர்



சேலம் மாவட்டம் காவேரிபட்டியில் இருந்து குமார பாளையம் செல்லும் சாலை மற்றும் பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விவசாய நிலங்கள், வீடுகள் கோவில்கள் என பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 



கடலூர்-நாகை மாவட்டத்தை இணைக்கும் கொள்ளிடம் 
ஆற்று கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு  கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியதை தொடர்ந்து 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

"காவிரியால் பலனில்லை"-விவசாயிகள் வேதனை



அரியலூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் காவிரி நீரால் தங்களுக்கு எந்த பயனுமில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருச்சி முக்கொம்பு மற்றும் கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி தண்ணீர் வங்க கடலில் கலக்கிறது. இவ்வாறு வீணாகும் தண்ணீரை சேமிக்கும் விதமாக திருமழபாடி, ஆங்கரை உள்ளிட்ட 7 இடங்களில் தடுப்பணைகள் மற்றும் கால்வாய்கள் கட்டி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளை நிலங்களின் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்