பொது நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்ளுவது தொடர்பான வழக்கு- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கரூர் மாவட்டம் கட்டளை வாய்க்கால் பகுதி ஆக்கிரமிப்ப அகற்ற ஆட்சியர் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
பொது நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்ளுவது தொடர்பான வழக்கு- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
x
இந்நிலையில் கரூர் கீழ் நீதிமன்றத்தை எதிர்மனுதாரர்கள் நாடிய போது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கரூர் ஆட்சியர் சார்பில்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளி, பொது நில ஆக்கிரமிப்பு சட்டத்தை முறையாக அறியாமல்  வழக்கு தாக்கல் செய்வதால் தான், சிவில் நீதிமன்றங்களில் அதிக அளவிலான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். இந்த சட்டத்தை சிவில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, ஆட்சியரின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தார். 

கரூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். பொது நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளில், சிவில் நீதிமன்றங்கள் பின்பற்றி நடக்க வேண்டிய முறை குறித்து உயர்நீதிமன்ற பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விலக்கிக் கொள்வது குறித்து  அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், தங்கள் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உரிய வழிக்காட்டுதல்களை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்