ராகுல்காந்தி பாதுகாப்பில் குளறுபடியா? - தமிழக காவல்துறை சொல்வது என்ன?

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்த போது காவல்துறை பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக எழுந்த குற்றசாட்டுக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி பாதுகாப்பில் குளறுபடியா? - தமிழக காவல்துறை சொல்வது என்ன?
x
திட்டமிட்ட நேரத்தில், சென்னைக்கு வந்து விட்ட ராகுல்காந்தி, லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இருந்து பிற்பகல் இரண்டு ஐம்பது மணிக்கு ராஜாஜி அரங்கிற்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணிநேரம் முன்னதாகவே, அதாவது ஒன்று 42 -க்கே புறப்பட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று 15 மணிக்கு ராஜாஜி அரங்கில் ராகுலை எதிர்ப்பார்த்து ஒரு கூடுதல் ஆணையர் தலைமையில் 200 போலீசாரை ஒதுக்கி பிரத்யேக பாதுகாப்புக்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அக்குழு  தயாராவதற்கு முன்பே அதாவது பிற்பகல் இரண்டு ஐந்துக்கே, ராகுல்காந்தி வந்து விட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி அரங்கத்திற்கு தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் வந்து கொண்டிருந்ததால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வந்ததாகவும், பிரத்யேக பாதுகாப்பு குழுவினர் தயாராவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே ராகுல் காந்தி அங்கு வந்தது தான் பாதுகாப்பு குளறுபடிக்கு காரணம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Next Story

மேலும் செய்திகள்