இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்பு - ஆகஸ்ட் 14 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

இந்திய மருத்துவம், ஹோமியோபதி படிப்புக்காக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்பு - ஆகஸ்ட் 14 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
x
இந்திய மருத்துவம், ஹோமியோபதி படிப்புக்காக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, வரும் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சென்னை, பாளையங்கோட்டை மற்றும் கோட்டாரில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 5ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்