கோலாகலமாக தொடங்கியது ஆடி அமாவாசை திருவிழா

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கோலகலமாக தொடங்கியுள்ளது
கோலாகலமாக தொடங்கியது ஆடி அமாவாசை திருவிழா
x
* சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கோலகலமாக தொடங்கியுள்ளது

* வரும் 11 ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறவுள்ள நிலையில், 9 ஆம் தேதியான இன்று முதல் 14 ஆம் தேதி வரை கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  

* காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 10 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுவந்த நிலையில், இந்தாண்டு 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

* முதல் நாளான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலணிகள் இன்றி 5 கிலோ மீட்டர் தூரம் மலையில் நடந்து சென்று கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். 

* பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,  ஒரு ஏ.டி.எஸ்.பி., 5 டி.எஸ்.பி , 25 ஆய்வாளர்கள் என ஆயிரத்து 500 போலீசார் சதுரகிரி மலை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்