திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் : 2-வது நாளாக நடந்த சிபிஐ சோதனை நிறைவு

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் : 2-வது நாளாக நடந்த சிபிஐ சோதனை நிறைவு
x
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 கிலோ தங்கம், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.  இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, சிபிஐயிடம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் திருச்சிக்கு வந்த சிபிஐ டிஎஸ்பி தலைமையில் 3 ஆய்வாளர்கள் உட்பட 9 பேர் கொண்ட குழு, சோதனை மேற்கொண்டது. 2வது நாளாக இன்றைய தினம் நடந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, 2 ஆய்வாளர்கள், பாங்காங்கை சேர்ந்த 2 பயணிகள் உள்பட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 11 பேரையும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ போலீசார் முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்