விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு மும்முரம்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு மும்முரம்...
x
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எடப்பாடியை அடுத்துள்ள செட்டிப்பட்டி மோட்டூரில், சின்னசக்தி என்ற சிற்ப கலைஞர், சிங்க வாகன கணபதி, மயில் வாகன கணபதி, பாகுபலி  கணபதி, ஆதிசேஷ கணபதி, நந்தி கணபதி என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறார். முன்பதிவு செய்தவர்களுக்காக இங்கு, அரை அடி முதல் 16 அடி உயரம் வரை தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளுக்கு, தற்போது வர்ணம் பூசும் பணி  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் போது தண்ணீர் மாசுபடாமல் இருக்க தாள், கணிமண் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கிறார், சிற்ப கலைஞர் சின்னசக்தி. நேர்த்தியான சிற்பங்களை வடிவமைத்து வரும் இவர், ஐ.எஸ்.ஓ. உலகத்தரசான்று, ஒளிரும் நட்சத்திர விருது, அப்துல்கலாம் விருது, தெற்கு ஆசிய விருது,  மாநில விருது என ஏழு வகையான விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் கோயில் கோபுரங்களுக்கு சிலைகளை பதிக்கும் சிற்பியாகவும் பணியாற்றும் சின்னசக்தி, பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப விநாயகர் சிலை வடிவமைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.



Next Story

மேலும் செய்திகள்