ஈரானில் உணவின்றி தவித்த மீனவர்கள் அரசு உதவியுடன் தாயகம் திரும்பினர்

ஈரானில் உணவின்றி தவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் ஊர் திரும்பினர்.
ஈரானில் உணவின்றி தவித்த மீனவர்கள் அரசு உதவியுடன் தாயகம் திரும்பினர்
x
* ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டனத்தை சேர்ந்த சுஜேய், சேவியர், பெல்டன், ஆரோக்கியராஜ் மற்றும் பெரியதாழையை சேர்ந்த விக்டர், பிரசாத் மற்றும் அஜில்டன் ஆகியோர் ஏஜெண்ட் மூலம் ஈரானுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

* விசைப்படகு உரிமையாளர் முகம்மது சலா என்பவரிடம் 7 பேரும் வேலை செய்த நிலையில், சம்பளப் பிரச்சனை காரணமாக பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு 7 பேரையும் வெளியில் அனுப்பியதாக கூறப்படுகிறது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் 2 மாதமாக இருப்பதை உறவினர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

* இந்நிலையில் அவர்கள் உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து 7 பேரும் நேற்று ஊர் திரும்பினர். அவர்களை உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் உற்சாக வரவேற்றனர்.Next Story

மேலும் செய்திகள்