கூட்டுறவு சங்க தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை
பதிவு : ஆகஸ்ட் 05, 2018, 01:22 PM
இரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது.
இரண்டாம் நிலை கூட்டுறவு  சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 18 ஆயிரத்து 465 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிக்க தடைகளை விலக்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகிய பணிகள் நாளை காலை 10 மணி தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. 3ஆம் மற்றும் 4ஆம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் (7ஆம் தேதி) அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 3ஆம் மற்றும் 4ஆம் நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வரும் 11ஆம் தேதி நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்ட, ரத்து செய்யப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

மின்னக்கல் மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா

நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

2 views

நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

38 views

போராடி பெற்ற காவிரி நீரை கடலில் கலக்க விடுவதா?

கொள்ளிடம் ஆற்றின் வழியே வரும் காவிரி நீர் எவ்வித பயனுமின்றி கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

381 views

கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கன மழையினால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

74 views

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் மண் சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் 2வது நாளாக ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.