இருசக்கர வாகனத்தை மடக்கிய போலீசார் - சாவியைக் கொடுக்க சொல்லி ஆற்றில் குதித்த இளைஞர்

சென்னை அடையாறு பாலம் அருகே, இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கியதால், ஆத்திரம் அடைந்த இளைஞர் ஒருவர், பாலத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனத்தை மடக்கிய போலீசார் - சாவியைக் கொடுக்க சொல்லி ஆற்றில் குதித்த இளைஞர்
x
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நேற்று இரவு தனது நணபர்களுடன்  கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  அடையாறு பாலம் அருகே ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்த போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை உறுதி செய்த போலீசார், இருசக்கரவாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு, வாகனத்தை பறிமுதல் செய்ய முற்பட்டனர். அப்போது, சாவியை தராவிட்டால், பாலத்தில் இருந்து கீழே குதித்து விடுவேன் என போலீசாரை ராதாகிருஷ்ணன் மிரட்டியுள்ளார். போலீசார் அதனை பொருட்படுத்தாத நிலையில், குடிபோதையில் இருந்த ராதாகிருஷ்ணன் அடையாறு கூவம் ஆற்றில் திடீரென குதித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் குதித்த இளைஞரை, தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடினர். ஆனால் இளைஞர் கிடைக்கவில்லை. ஆற்றில், நீரோட்டம் குறைவாக இருப்பதால் ராதாகிருஷ்ணன் நீந்திச் சென்று தப்பித்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராதாகிருஷ்ணன் வீடு வந்து சேராததால் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். ராதாகிருஷ்ணனை தேடும் பணி, இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்