வானமே கூரையாய் காட்சி தரும் திருச்சி வெக்காளி அம்மனின் சிறப்புகள்

வானமே கூரையாய் காட்சி தரும் திருச்சி வெக்காளி அம்மனின் சிறப்புகள் குறித்து ஒரு செய்தித் தொகுப்பு
வானமே கூரையாய் காட்சி தரும் திருச்சி வெக்காளி அம்மனின் சிறப்புகள்
x
திருச்சி உறையூரில் அழகிய திருமுகத்துடன் காட்சி தருகிறாள் வெக்காளி அம்மன்...சோழர்கள் வழிபட்ட தெய்வம் இவள். மற்ற கோயில்களில் இருப்பதை போல மண்டபமோ, கூரையோ இங்குள்ள அம்மனுக்கு கிடையாது. மழையையும், வெயிலையும் பார்த்தபடி இவள் இருப்பதற்கான காரணமும் உண்டு.

சாரமா முனிவர் தாயுமானசுவாமிக்கு படைப்பதற்காகவே பூச்செடிகளை வளர்த்து பூக்களை சுவாமிக்கு அணிவித்து வந்தார்.ஆனால் பிராந்தகன் எனும் வணிகன், அங்குள்ள பூக்களை எடுத்து வன்பராந்தகன் அரசனுக்கு வழங்கி வந்தார். 

ஆனால் தன் தோட்டத்தில் பூக்கள் குறைவதை பார்த்த முனிவர் அரசனிடம் சென்று முறையிட்ட போது, அதை அவர் புறக்கணித்ததால் தாயுமானசுவாமி கோபம் கொண்டு மண் மாரி பொழியத் தொடங்கினார்.

உறையூரை மண் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் காவல் தெய்வமான வெக்காளி அம்மனிடம் முறையிட்டுள்ளனர். அதன்பிறகு வெக்காளி அம்மன், தாயுமானசுவாமியிடம் வேண்டியதால்  மண் மாரி நின்றது. வீடுகளை இழந்து நிராதரவாய் நின்ற மக்களுக்காக தானும் அந்த கோலத்தை ஏற்றுக் கொண்டாள் வெக்காளி.

மக்களின் துயரத்தை ஏற்று தானும் வருந்திய அம்பாள் இன்று மக்களை காக்கும் தெய்வமாகவே காட்சி தருகிறாள். இங்கு வரும் பக்தர்கள் தங்கள்  வேண்டுதல் நிறைவேறுவதாக நம்பிக்கை  தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்