மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ?

மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ? என அக்குபஞ்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.
மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ?
x
மருத்துவர் உதவியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்க்குமாறு மக்களை தவறாக வழிநடத்தியதாக, ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்குபஞ்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு, வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது? என, கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலர் அக்கு ஹீலர் வெளியிட்ட அறிக்கையில், வீட்டுப் பிரசவம் 1930 களில் இருந்தே தடை செய்யப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்களும், அரசு நிர்வாகமும் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களிலும் பிறப்பு பதிவு குறித்த அறிவிப்பு பலகையில், வீட்டில் நிகழும் பிறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு அலுவலருக்கு தெரிவிக்க வலியுறுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறப்பு பதிவு செய்யும் படிவத்தில் பிரசவம் நடந்த இடம் வீடா? மருத்துவமனையா? என்ற கேள்வியை உள்ளாட்சித் துறை கேட்பது சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததனாலா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் வீட்டில் பிறந்துள்ளதற்கான ஆதாரங்களாக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆவணத்தில் "பிரசவம் நடைபெறும் இடம் மருத்துவமனையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா?" என்ற கேள்விக்கு "கட்டாயம் இல்லை" என்றும்,

குழந்தை வீட்டில் பிறந்த காரணத்திற்காக பிறப்பு சான்றிதழ் தருவதை மறுக்க முடியுமா?" என்ற கேள்விக்கு "மறுக்க இயலாது" என துறை இயக்குநர் பதில் அளித்துள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். அலோபதி மருத்துவமனைகளில் மட்டுமே குழந்தை பிறக்க வேண்டும், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ? என அக்கு ஹீலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்