பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள கோயில் சிலைகள் : சிலை பாதுகாப்பு மையத்தை சீரமைக்க கோரிக்கை

புதுக்கோட்டை சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பாதுகாப்பின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள கோயில் சிலைகள் : சிலை பாதுகாப்பு மையத்தை சீரமைக்க கோரிக்கை
x
புதுக்கோட்டை மாவட்ட கோயில்களில் உள்ள ஐம்பொன் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத  சிலைகள், பிரகதாம்பாள் கோயில் அருகே உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் விழா நடைபெறும் போது இங்கிருந்து சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்படும். ஆனால் சமீப காலமாக விழாக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு சில சிலைகள் முறையாக ஒப்படைக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சிலை பாதுகாப்பு மைய கட்டிடம் பாதுகாப்பின்றி உள்ளதாகவும், கட்டித்தை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடப்பதாகவும், விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  எனவே சிலை பாதுகாப்பு யைத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்