காரில் வந்து ஆடுகளை திருடிய ஆசாமிகள்- துரத்தி சென்று காரை மடக்கி பிடித்த காவலர்கள்
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 06:06 PM
உடுமலையில் பட்டப்பகலில் காரில் ஆடுகளை திருடிவிட்டு தப்ப முயன்றவர்களை தடுத்த காவலர் மீது காரை இடித்து தப்பியவர்களை துரத்தி சென்று போலீசார் பிடித்துள்ளனர்.
தாராபுரம் பகுதியில் காரில் வந்த சிலர் ஆடுகளை திருடி காருக்குள் போடுவதை கண்ட அப்பகுதி மக்கள் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பிவிட்டனர்.இதனையடுத்து காரின் எண்ணை காவல்துறைக்கு தகவல் அளித்தனர். 

இதனையடுத்து உடுமலை பழைய பேருந்து நிலைய சிக்னல் அருகே சம்பந்தப்பட்ட காரை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி நிறுத்த முயன்றார்.ஆனால் காரில் வந்தவர்கள் காவலர் மீது காரை மோதிவிட்டு தப்பிவிட்டனர். 

இதில் காயமடைந்த  ரகுபதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு கோமங்கலம் என்ற இடத்தில் காரை மடக்கி பிடித்தனர். 

காரில் மதுபோதையில் இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்திய 4 ஆடுகளில், இறந்த நிலையில் 3 ஆடுகளையும் உயிருடன் ஒரு ஆட்டையும் மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

3259 views

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்

சோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

964 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1923 views

பிற செய்திகள்

பாம்பன் பாலத்தை கடந்துச் சென்ற மிதவைக் கப்பல்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை கடந்து சென்ற மிகப்பெரிய மிதவைக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

320 views

சிலைகள் மீட்கப்பட்ட விவகாரம்: "ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 10 பேர் தலைமறைவு" - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்

சிலைகள் மீட்கப்பட்ட வழக்கில் தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் உட்பட 10 பேர்கள் தலைமறைவாக உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

8 views

அழிவின் விளிம்பில் சர்க்கஸ் தொழில்...

அழிவின் விளிம்பில் இருக்கும் சர்க்கஸ் தொழிலால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலைஞர்களின் நிலையை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்....

62 views

தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் பட்டுப்புடவைகள்

தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் பட்டுப்புடவைகளில் புதுவரவு என்ன? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

206 views

பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

157 views

மர்ம காய்ச்சலுக்கு ஆறாம் வகுப்பு மாணவி பலி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கே.காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தனின் மகள் சவீதா அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.