தனியார் அனல் மின்நிலையத்தை அகற்ற வேண்டும் - கடலில் விடப்படும் கழிவுநீரால் மீன்வளம் பாதிப்பு

தனியார் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு மற்றும் நிலக்கரி துகள் காரணமாக, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் அருகேயுள்ள புதுக்குப்பம் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
தனியார் அனல் மின்நிலையத்தை அகற்ற வேண்டும் - கடலில் விடப்படும் கழிவுநீரால் மீன்வளம் பாதிப்பு
x
சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிபேட்டையில், தனியார் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் பின்புறம் தேக்கி வைக்கப்படும் நிலக்கரி துகள்கள் காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குப்பம் மக்கள்  புகார் தெரிவித்துள்ளனர்.உணவுப்பொருட்கள் மற்றும்  தண்ணீரில் நிலக்கரி துகள்கள் படிவதால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள்  வேதனை தெரிவித்துள்ளனர் . வகுப்பறை முழுவதும் நிலக்கரித்தூள் படிந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்