மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெட்டி படுகொலை
பதிவு : ஆகஸ்ட் 01, 2018, 10:25 AM
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் பி.ஏ.வான பூபதி கண்ணன் என்பவர் கள்ளக்காதலியுடன் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அருகே மாத்தூரை அடுத்த அரைவட்ட சாலையில், காருடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொள்கின்றனர்.விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேசனின் நேரடி உதவியாளரான பூபதி கண்ணன் என்பது தெரிய வருகிறது.
அதிர்ச்சியடைந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்,மாத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரித படுத்துகின்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பூபதி கண்ணனின் மனைவியிடம் விசாரித்ததில், கடைசியாக கணவரிடம் பேசுகையில், வெளியூரில் இருப்பதாகவும், விரைவில் வீட்டிற்கு வருவதாகவும் கூறியதாக தெரிவிக்கிறார். அடுத்ததாக போலீசார் தொழில்நுட்ப உதவிகளை நாடுகின்றனர்... பூபதி கண்ணன் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ஆட்சியர் அலுவலகத்தில் அவருடன் டைப்பிஸ்ட் ஆக பணிபுரியும் சவுந்தர்யா என்பவர் சிக்குகிறார்.பூபதி கண்ணனின் கார் சென்ற இடங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததிலும், அவருடன் சவுந்தர்யா சென்றது உறுதியாகி இருக்கிறது.சவுந்தர்யாவை பற்றி விசாரித்தால்,அவரும் கொடூர பின்னணியை கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த சவுந்தர்யா, அதன் பின் வேளாண் துறையில் பணிபுரிந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தும் , தனது கள்ளத்தொடர்பை சவுந்தர்யா கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதில் மன உலைச்சலுக்கு ஆளான இவரது கணவர் சுரேஷ், தற்கொலை செய்துகொள்கிறார். பணியில் இருக்கும் போது கணவர் இறந்ததால் தான் சவுந்தர்யாவிற்கு ஆட்சியர் அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால் இங்கும் சவுந்தர்யா பூபதி கண்ணனுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

சவுந்தர்யாவை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முரண்பாடான தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.பூபதி கண்ணனுடன் காரில் சென்று திருச்சி மாவட்டம் மாத்தூரை அடுத்த அரைவட்டம் பகுதியில், இருவரும் தனிமையில் இருந்தபோது, மர்ம நபர்கள் நான்குபேர் திடீரென கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறுகிறார். 

சினிமா காட்சிகளில் வருவது போல், பூபதி கண்ணன் அவர்களை தடுத்து சவுந்தர்யாவை தப்பிக்க வைத்துவிட்டு, தன் உயிரை இழந்துவிட்டதாக தெரிவிக்கிறார் சவுந்தர்யா.இந்த தகவல்களில் போலீசாருக்கு முரண்பட்ட கருத்துக்கள் உள்ளதால், தொடர்ந்து போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார் சவுந்தர்யா,முன்னாள் கள்ளக்காதலனை வரவைத்து பூபதி கண்ணனை தீர்த்து கட்டினாரா, அல்லது வேறு முன்பகை ஏதேனும் இருக்கிறதா என பல கேள்விகளுடன் சவந்தர்யாவிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. எனவே இச்சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

122 views

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா

மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

890 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1715 views

பிற செய்திகள்

கோயிலில் தீ மிதித்த போது தவறி விழுந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை - வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் நேற்று தீ மிதித்த இருவர் கால்தவறி தீயில் விழுந்து காயமடைந்தனர்.

9 views

உபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவான கலைப்பூங்கா...

உபயோகமற்ற பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

62 views

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை வாபஸ்

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வாபஸ் பெற்றுள்ளது.

1121 views

அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்

ஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.

12 views

பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்

சென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்

18 views

மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்

கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

512 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.