கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்கள்: உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்க உத்தரவு.
பதிவு : ஆகஸ்ட் 01, 2018, 07:45 AM
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு புகார் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைத்து விசாரிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக திமுக தலைமை கொறடா சக்கரபாணி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் பி.டி.ஆஷா அமர்வு இன்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 மண்டலங்களுக்கு குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும், இந்த குழுவில் ஆட்சியர்கள், இணைப்பதிவாளர்கள் இடம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் குழுக்கள் அமைத்து, உரிய விளம்பரம் செய்ய வேண்டும் என்றும், புகார் அளித்தவர்கள் இந்த குழுவை அணுக வேண்டும் என உத்தரவிட்டுள்ளன​ர். விசாரணையின் முடிவில், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என முடிவுக்கு வந்தால், அந்த சங்கங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 16 ஆயிரத்து 344 நிர்வாகிகள் சட்டப்படி கடமையாற்றவும் அனுமதி வழங்கியும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

                                கூட்டுறவு சங்கத் தேர்தல் அட்டவணை வெளியீடு

கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில், தேர்தலுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

                               

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையில், நிலை 2-க்கு உட்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே  முடிவுகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதியே அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. நிலை 3 மற்றும் 4-ல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்களுக்கு சமமாகவோ, குறைவாகவோ வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை ஆகஸ்ட் 2 -ல் தேர்ந்தேடுக்கப்பட்டதாக அறிவி​க்கலாம் என தெரிவித்துள்ளது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கான கூட்ட அறிவிப்புகள் 3 மற்றும் 4 ஆம் நிலைக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலை 3 மற்றும் 4-க்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடத்த வேண்டும் என்றும், உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய சங்கங்களுக்கு வாக்கு எண்ணிக்கையோ, தேர்தல் முடிவோ அறிவிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிற செய்திகள்

மத்திய அரசின் அழுத்தங்களுக்கு உட்பட்டு கவர்னர் செயல்படுகிறார் - அன்புமணி

தமிழக ஆளுநர் நேர்மையானவர்தான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

6 views

என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி

என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி

11 views

ரயில் நேரத்தை தாமதமாக்க வெடிகுண்டு மிரட்டல் - பிடிபட்ட இளைஞர் போலீசாரிடம் வாக்குமூலம்

கோவை விரைவு ரயில் புறப்படும் நேரத்தை தாமதப் படுத்தவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக வடபழனி காவல்துறையிடம் பிடிபட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

449 views

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் - சிவக்குமார்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

39 views

மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

396 views

கேரளாவில் இருந்து குன்னூருக்கு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான வவ்வால்கள்

தொடர்மழை காரணமாக கேரளாவில் இருந்து குன்னூர் பகுதிக்கு வவ்வால்கள் அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளன.

1031 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.