கத்தி முனையில் பொறியாளர் கடத்தல்- 4 பேர் கைது
சென்னை அண்ணா நகரில் பொறியாளரை கத்தி முனையில் காரில் கடத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொளத்தூரை சேர்ந்த பிரமோத் என்பவர் அண்ணா நகரில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பணியை முடித்து விட்டு காரில் ஏற முயற்சித்த பிரமோத்தை மர்ம நபர்கள் காருக்குள் தள்ளி கடத்தியுள்ளனர். அந்த கார், பாடி மேம்பாலத்தை கடந்ததும் மேலும் இருவர் காருக்குள் ஏறியுள்ளனர். கார் அம்பத்தூர் அருகே சென்ற போது, பிரமோத் திடீரென காரில் இருந்து வெளியே குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கடத்தல்காரர்கள் பொதுமக்களிடம் இருந்து தப்ப காரை மின்னல் வேகத்தில் இயங்கியுள்ளனர்.
அப்போது அந்த கார் சுவற்றின் மீது மோதி நின்றதால் கடத்தல்கார்கள் நான்கு பேரையும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் ஒட்டெரியை சேர்ந்த ஜானகிராமன், பிரான்சிஸ், இம்ரான் மற்றும் பட்டாளத்தை சேர்ந்த பிபாகரன் ஆகியோர் பிரமோத்தை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story