துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் விபரீதம் - குண்டை அகற்றாமல் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள்

சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது வெளியேறிய குண்டு தாக்கி, ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் விபரீதம் - குண்டை அகற்றாமல் சிகிச்சை அளித்த  அரசு மருத்துவர்கள்
x
* சென்னை திரிசூலம் மலையடிவாரத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று காலை துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி​யின் போது ஒரு துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு,  அருகில் இருந்து ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் கூரையை ஊடுருவி சென்றுள்ளது. 

* இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராஜேந்திரன் காலில் அந்த குண்டு பாய்ந்ந்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரன், அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

* அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டுக்கு வந்த பின்னரும் ரத்தக் கசிவு நிற்காததால், காயம் ஏற்பட்ட இடத்தை கீறிப் பார்த்துள்ளார். 

* காலில் குண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற பயிற்சிகளை உடனே நிறுத்தவேண்டும் என பாதிக்கப்பட்டவரின் மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.





Next Story

மேலும் செய்திகள்