சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு

இந்த படத்தில் காணப்படும் கருவியில் கருணாநிதியின் இதய துடிப்பு 94, ஆக்ஸிஜன் அளவு 97 என்ற அளவில் இருப்பதையும் செயற்கை சுவாசம் இல்லாமல் சிகிச்சை பெறுவதையும் காண முடிகிறது.
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு
x

மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு நலம் விசாரிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. 

கருணாநிதி சிகிச்சை பெறும் அறையில், அவரது உடல்நலம் குறித்து குடியரசு துணை தலைவர் விசாரிக்கும் புகைப்படத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் உள்ளனர்.

இந்த படத்தில் காணப்படும் கருவியில் கருணாநிதியின் இதய துடிப்பு 94, ஆக்ஸிஜன் அளவு  97 என்ற அளவில் இருப்பதையும் செயற்கை சுவாசம் இல்லாமல் சிகிச்சை பெறுவதையும் காண முடிகிறது. 
Next Story

மேலும் செய்திகள்