வால்பாறையில் தொடர் கொள்ளை சம்பவங்கள் : கோவில், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொள்ளை

வால்பாறையில் ஒரே நாளில் கோவில், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வால்பாறையில் தொடர் கொள்ளை சம்பவங்கள் : கோவில், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொள்ளை
x
எம்.ஜி.ஆர். நகர் பகுதி மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து தாலிபொட்டு மற்றும் 7 ஆயிரத்து 500 ரூபாயை மர்மநபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.இந்த கோவிலுக்கு முன்புறம் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் தோட்ட உரிமையாளர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒரே நாளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து அறிந்த போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் சந்தேகப்படும் படியாக சென்ற சிலரின் புகைப்படங்களை கொண்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கேமராக்களை ஆய்வு செய்த போது சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தது 
               


கொள்ளை சம்பவம் நிகழ்ந்த கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளின் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 சிறுத்தைகள் அதிகாலை நேரத்தில் நடந்து செல்லும் காட்சிகள்  பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்