ஏடிஎம்மில் சினிமா பாணியில் மோசடி

ஏடிஎம்மில் பணம் எடுத்து தர சொன்னவரை ஏமாற்றி 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்.
ஏடிஎம்மில் சினிமா பாணியில் மோசடி
x
திருக்கோவிலூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் கடந்த 17-ஆம் தேதி, ஜெயசீலன் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். தனக்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்த தெரியாத காரணத்தால், அருகில் இருந்த இளைஞர் ஒருவரிடம் தனது அட்டையைக் கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அட்டையைப் பெற்றுக்கொண்ட அந்த நபர், அதனை அருகில் இருந்த தனது கூட்டாளியிடம் லாவகமாக கொடுத்துவிட்டு, அதேபோல இருந்த வேறு ஒரு அட்டையை ஜெயசீலனிடம் கொடுத்துள்ளார். தனது பின் நம்பரை ஜெயசீலன், அவர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அட்டையை வாங்கிய கூட்டாளி, அதை அருகில் உள்ள மற்றொரு ஏடிஎம்மில் பயன்படுத்தி, 32,000 ஆயிரத்தை எடுத்துள்ளார். இந்தக்காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்