மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த மகளிர் விடுதி வார்டன்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில், தனியார் விடுதி வார்டன் புனிதாவை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த மகளிர் விடுதி வார்டன்
x
கோவையில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான மகளிர் விடுதி உள்ளது. அவரது பிறந்த நாள் விழாவிற்கு விடுதியில் தங்கியுள்ள சில மாணவிகளை வார்டனாக பணிபுரியும் புனிதா அழைத்து சென்றுள்ளார். அப்போது மது அருந்துமாறு மாணவிகளை புனிதா வற்புறுத்தியதோடு ஜெகநாதன் விருப்பப்படி நடந்து கொண்டால் வேண்டியதை வாங்கி தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பெற்றோர் மூலம் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தனர். 

இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் ஜெகநாதன் உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் ஒரு கிணற்றிலிருந்து அவர் உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில் காதலருடன் தலைமறைவாகி விட்டபுனிதாவை தேடி தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். புனிதாவின் சொந்த ஊரான மேட்டுப்பாளையத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்