25 வருடங்களாக கேட்பாரற்று கிடக்கும் 5 கோடி ரூபாய் பணம்

சென்னை தி நகரில் மல்டிபிள் பைனான்ஸ் இன்வெஸ்மெண்ட் அண்ட் ஆக்ரோடெக் என்ற பெயரில் தனியார் சீட்டு கம்பெனி நிறுவனம்,மக்களிடமிருந்து ஏமாற்றிய 68 லட்ச ரூபாய் பணத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 24 ஆண்டுகளுக்கு பின் பறிமுதல் செய்தனர்.
25 வருடங்களாக கேட்பாரற்று கிடக்கும் 5 கோடி ரூபாய் பணம்
x
தமிழகம் முழுவதும் ஏலசீட்டு மோசடி புகார் தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததையடுத்து, அது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு காவல்துறை 2 ஆயிரமாவது ஆண்டில் பொருளாதார குற்றப்பிரிவை ஏற்படுத்தியது.இந்த பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 25 ஆண்டுகளாக சுமார் 5 கோடி ரூபாய் பணம் சீட்டு நடத்தி மோசடி செய்த நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரிடம் உள்ளது.சென்னை தி நகரில் மல்டிபிள் பைனான்ஸ் இன்வெஸ்மெண்ட் அண்ட் ஆக்ரோடெக் என்ற பெயரில் தனியார் சீட்டு கம்பெனி நிறுவனம் மக்களிடமிருந்து ஏமாற்றிய 68 லட்ச ரூபாய் பணத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 24 ஆண்டுகளுக்கு பின் பறிமுதல் செய்தனர். அதில்13 லட்சம் ரூபாயை 400 வாடிக்கையாளர்களுக்கு போலீசார் திருப்பி அளித்தனர்.மேலும் 275 பேர்களுக்கு வழங்க வேண்டிய 55 லட்ச ரூபாய்  தொகையை பெற  யாரும் இதுவரை பெற முன் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பலமுறை அறிவிப்புகள் கொடுத்தும் எந்த பலனும் கிட்டவில்லை எனவும்,மேலும் பல வாடிக்கையாளர்கள் முகவரியை மாற்றி சென்று விட்டதால் என்ன செய்வது என்று தெரியவி்ல்லை எனவும் போலீசார் கூறியுள்ளனர்.இதேபோன்று 5 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சினேகம் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 25 ஆண்டுகளாக போராடி, 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.

Next Story

மேலும் செய்திகள்